கேசவன் பூங்காவில்  குடிசை மாற்று வாரியக் பகுதியில்  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்

கேசவன் பூங்காவில் குடிசை மாற்று வாரியக் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்

கேசவன் பூங்காவில் குடிசை மாற்று வாரியக் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் ரவிசந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை தமிழக சட்டசபையில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்தின் தொகுதி மக்களுக்காக வைத்த கோரிக்கைள் வருமாறு:-

பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் இலவச கழிவறைகள் இல்லை. அதை உடனடியாக இந்த அரசு அமைத்துத் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். எழும்பூர் தொகுதி, 58-வது வார்டில், நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள விளையாட்டுத் திடலில் உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்க வேண்டும்.

நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் ரேஷன் கடையை அரசுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்க வேண்டும். தெருக்களில் பழைய குடிநீர் செல்லும் குழாய்களை அகற்றி, புதிய குடிநீர் செல்லும் குழாய்கள் அமைக்க வேண்டும். எல்லையம்மன் கோயில் அருகில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்குத் தனித் தனியாக கடைகள் ஒதுக்கவேண்டும். நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள சமுதாயக்கூடத்தில் இலவச மிக்சி, கிரைண்டர் போன்றவை பொதுமக்களால் பயன்படுத்தமுடியாமல் உள்ளன. உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்.

எழும்பூர் தொகுதி, 61-வது வார்டில், டிரைவர் தெருவில் உள்ள மக்கள் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் செல்வதால், அவர்களுக்கு டிரைவர் தெருவில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். டாக்டர் சந்தோஷ் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், அதை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும். எழும்பூர் தொகுதி, 77-வது வார்டில், சிவராஜபுரம் கார்ப்பரேஷன் லைனில் உள்ள பழுதடைந்த உடற்பயிற்சிக் கூடத்தை புதிய உடற்பயிற்சிக் கூடமாக அமைத்துத் தரவேண்டும். பழைய ஆட்டுத் தொட்டி தெருவில் சென்னை மாநகராட்சி மைதானத்தில் உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்கவேண்டும்.

கேசவன் பூங்காவில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். தெருக்களில் சிறிய பழைய குடிநீர் செல்லும் குழாய்களை அகற்றி, புதிய குடிநீர் செல்லும் குழாய்கள் அமைத்துத் தர வேண்டும். கே.பி. பூங்கா குடியிருப்பு, 15-வது பிளாக் முதல் 35-வது பிளாக் வரை இருக்கின்ற 864 குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாகக் கட்டித் தரவேண்டும். அய்யாவு தெரு குளக் கரையைத் தூர் வாரி, அங்குள்ள ஈமக்கிரியை மண்டபத்தைப் புதுப்பித்துத் தரவேண்டும். தட்டாங்குளம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அங்காளம்மன் கோயில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு அடிமனை வாடகையைக் குறைக்கவேண்டும்.

மேலும், குடும்பத் தலைவர் இறந்தால் வாரிசுதாரருக்கு பெயர் மாற்றம் செய்யவேண்டும். கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் பழைய பிளாக்கை இடிக்கும் திட்டம் இருப்பதால், புதிய பிளாக் கட்டித் தரும்வரை அதில் வசிக்கும் மக்களுக்கு மாதம் ரூ.3,000/- வீதம் வழங்கவேண்டும். எழும்பூர் தொகுதி, 78-வது வார்டில், சூளை காசி விஸ்வநாத சுவாமி-அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வசித்துவருபவர்களின் குடும்பத் தலைவர் இறந்தால், வாரிசுதாரர்களுக்கு பெயர் மாற்றம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அங்காளம்மன் கோயில் திருக்குளத்தைத் தூர் வாரி பல ஆண்டுகள் ஆனதால், குளம் இப்போது தூர் வாரப்படவேண்டும். எழும்பூர் தொகுதியில் 104-வது வார்டில், புதிய பூபதி நகர் மக்கள், ரேஷன் கடைக்குச் செல்ல சேத்துப்பட்டு இரயில்வே நடைபாதையைக் கடந்து செல்வதால், புதிய பூபதி நகரில் ரேஷன் கடை ஒன்றை அமைக்கவேண்டும். பங்கஜம் தெரு குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகள் 40 ஆண்டுகளுக்குமேல் ஆனதால், புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும். கங்காதீஸ்வரர் கோயில் குளத்திற்கு வரும் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்துவிடுவதால் கோயில் நிருவாகம் மழைநீர் குழாய்களை அடைத்துவிட்டார்கள்.

குளத்தில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக நடக்காத தெப்பத் திருவிழாவை நடத்தவேண்டும். எழும்பூர் தொகுதியில் 107-வது வார்டில், அனைத்து சாலைகளிலும் உள்ள மின் விளக்கு கம்பங்களில் எல்.இ.டி. பல்புகள் அமைத்துத் தரவேண்டும். சுப்புராயன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால், அப்பணியிடங்கள் புதிதாக நியமிக்கப்படவேண்டும். இவ்வாறு ரவிசந்திரன் எம்.எல்.ஏ பேசினார்.

Leave a comment