மண்டலம் 5, 58வது வார்டில் உள்ள சாமி பிள்ளை தெருவில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது.

மண்டலம் 5, 58வது வார்டில் உள்ள வெங்காடசலம் தெருவில் புதிய தார்சாலை போடப்பட்டது

மண்டலம் 5, 61 வார்டு வீராசாமி தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டது. குறிப்பாக,

(1) புதிய கழிவறைகள், சிறுநீர் கழிப்பிடம் கட்டப்பட்டது

(2) KG குழந்தைகள் மற்றும் PRIMARY மாணவர்களுக்கு Play Toys Park அமைத்து கொடுக்கப்பட்டது.

(3) குடிநீர் தேவைக்காக RO Plant வழங்கப்பட்டது

(4) அறிவியல் ஆய்வகத்திற்கு Cup Board (Glass) அமைக்கப்பட்டது

(5) பள்ளி வளாகத்தில் தோட்டமண் போட்டு பூச்செடி நடப்பட்டது

(6) பள்ளி கட்டிடத்தின் முன்புறம் உள்ள இடத்தை (Parking Tiles) போட்டப்பட்டது

(7) பள்ளிக்கு தகவல் பலகை (With Stand) உடன் வாங்கி தரப்பட்டது

மண்டலம் 6, 77 வார்டு, பி.கே.காலனி திட்டப்பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகளில், பழுதடைந்துள்ள கழிவு நீர் குழாய்கள், கழிவுநீர் தொட்டி, பழுடைந்த பீங்கான் கோப்பை,பழுடைந்த சொருகு ஒடு மாற்றி அமைக்கப்பட்டது பழுடைந்த படிக்கட்டுகளை சீரமைக்கப்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, சேதமடைந்த மேற்கூரை மற்றும் சுவர் பூசப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் பழுது பார்ப்பு பணிகள், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மண்டலம் 8, 104 வார்டு, R.K.புரம் திட்டப்பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம், குடியிருப்புகளில் பழுதடைந்துள்ள கழிவு நீர் குழாய்கள், மற்றும் கழிவுநீர் தொட்டி, பழுதடைந்த பீங்கான் கோப்பை, பழுதடைந்த சொருகு ஒடு மாற்றி அமைத்தல், பழுதடைந்த படிக்கட்டுகளை சீரமைக்கப்பட்டன.

பழுதடைந்துள்ள மேற்கூரை, சுவர்கள் பூசப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, குடியிருப்புகளில் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மண்டலம் 8,107 வது வார்டு, ஜெகநாதபுரம் சென்னை நடுநிலைப்பள்ளியில், பழைய சமையற் கூடம் இடிக்கப்பட்டு, புதிய சமையற் கூடம் கட்டப்பட்டது.

மண்டலம்-8,107 வது வார்டு, சுப்புராயன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், புதிய சமையற் கூடம் அமைக்கப்பட்டது

77 வது வார்டு, அய்யாவு தெருவில் உள்ள ஈமகிரியை மண்டபத்தை சுற்றி மதில்சுவர் கட்டப்பட்டது, பேவர் பிளாக் தரைதளம் அமைக்கப்பட்டது. மேல்நிலை நீர் தொட்டிமோட்டார் பம்பு, கிரில் கதவு அமைக்கப்பட்டது

மண்டலம்-6 வார்டு 77, பழைய ஆட்டு தொட்டி சாலையில் Multi Purpose Hall கட்டப்பட்டது.

வார்டு- 104 - 107 வார்டுகளில், கடும் வறட்சியை நிலவியதை அடுத்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மண்டலம் 5 –ல், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

மண்டலம்-5 – ல், எழும்பூர் தொகுதிக்குட்டபட்ட பல்வேறு இடங்களில் பழுதடைந்திருந்த பழைய குடிநீர் தொட்டிகளை எடுத்து விட்டு, புதிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.

மண்டலம்-5 –ல், 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது

மண்டலம்-8, 104,107 வார்டுகளில், குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், ஆழ்துளை கிணறு பணிகள் நிறைவேற்றப்பட்டன.

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பழுதடைந்துள்ள பழைய மார்க்-2 பம்புகள் மாற்றப்பட்டன.

மண்டலம்-6, வார்டு 77 மோதிலால் நேரு சாலையில், பல்நோக்கு கூடம் அமைக்கும் பணி முடிவடைந்தது.

78 வது வார்டு, சச்சிதானந்தம் 2 வது தெருவில் , நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக் கூடம் திறக்கப்பட்டது

மண்டலம்-6, வார்டு 77 பழைய ஆட்டு தொட்டி தெருவில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் கூடுதல் அறைகள் கட்டப்பட்டு, திறக்கப்பட்டன.

மண்டலம்-8, வார்டு-104 நேரு பூங்கா, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மண்டலம்-8, வார்டு-104 சாஸ்திரி நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மண்டலம்-8 வார்டு-107 எம்.எஸ்.நகர், டாக்டர் அம்பேத்கர் விளையாட்டுத் திடல் புதிய கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டது.

இறகுப்பந்து மைதானம் அமைக்கப்பட்டதோடு, மக்களின் நலன் கருதி மூலிகைச்செடிகள் நடப்பட்டுள்ளன.

மண்டலம் 5, வார்டு 58 - ல் உள்ள ராகவேந்திரா பூங்காவில், குழந்தைகள் விளையாடும் வகையில் புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மண்டலம்-5 வார்டு-58, ராட்லர் தெரு, சென்னை பெண் மேல்நிலைப்பள்ளியில் சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டன.

மண்டலம்-8, வார்டு-107 எம்.எஸ்.நகர் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டுத் திடலில், புதிய உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது.

மண்டலம்-8 வார்டு-107, ராமநாதன் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு, நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டன

மண்டலம்-8 வார்டு-107, வெங்கடாசலபதி தெருவில், புதிய உடற் பயிற்சி கூடம் கட்டப்பட்டு, அக்கூடத்திற்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மண்டலம் 6, 104 வார்டு, ஆர்.கே.புரம் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் பழுதடைந்துள்ள கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டி, பழுதடைந்த பீங்கான் கோப்பை உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன

மண்டலம் 5, வார்டு 58, உள்ள ராகவேந்திர பூங்காவில் புதிய காவலர் அறை, கழிப்பறை, புதிய நடைபாதை, இறகுப்பந்து மைதானம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன

வார்டு 61, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு உயிர்காக்கும் உபகரணங்கள், மெத்தைகள், தற்காப்பு உடை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

மண்டலம் 6, வார்டு 77-ல், உள்ள போகிபாளையம் இரண்டாவது சந்து பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடிம் கட்டப்பட்டது.

மண்டலம் 8, வார்டு 107-ல், ஜெகநாதபுரம் 1,2,3 ஆகிய தெருக்களில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன.

மண்டலம் 5, வார்டு 58-ல், நோவல் மருத்துமனை சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் புதிய செயற்கை புல் தரைக்கு மேற்கூரை அமைக்கப்பட்டது.

மண்டலம் 8, 104 வார்டு, கெங்குரெட்டி சுரங்கப்பாதை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காவலர் குடியிருப்புகள் மற்றும் புதிய நவீன உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது.