பணிகளை பார்வையிடும் கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ.

பணிகளை பார்வையிடும் கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ.

எழும்பூர் தொகுதி 5வது மண்டலத்திலுள்ள
58, 61வது வார்டுகளில் அடிப்படை வசதிகளை
நிறைவேற்ற வேண்டும்

துறை அதிகாரிகள் கூட்டத்தில் கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5வது மண்டலத்திலுள்ள 58, 61வது வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து செயற்பொறியாளர் சொக்கலிங்கம், உதவி செயற்பொறியாளர், இணை பொறியாளர், உதவி பொறியாளர் (தெருவிளக்கு), சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், குடிநீர் மற்றும் கழிவுநீர் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன் பங்கேற்று குடியிருப்பு பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அதன்விவரம் வருமாறு:

வார்டு 58 மற்றும் 61வது வார்டுகளில் உள்ள சாமி பிள்ளை தெரு, வெங்கடாசலம் தெருவிலுள்ள ஆழ்துளை தொட்டியை சீரமைக்க வேண்டும். ஈ.வி.கே.சம்பத் சாலையில் புதிய கழிவுநீர் குழாய்கள் மற்றும் சாலையின் இரண்டு பக்கத்திலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்.

நேவல் மருத்துவமனை சாலையிலுள்ள விளையாட்டு அரங்கம், அய்யப்பா விளையாட்டுத் திடல், சாமி தெருவிலுள்ள விளையாட்டுத் திடல் ஆகியவற்றில் புதிய எல்.இ.டி.விளக்குகள் அமைக்கவும், ஸ்டிங்கர்ஸ் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நியாய விலை கடைக்கு இடம் ஒதுக்கவும், துப்புரவு பணியாளர்களுக்கு அலுவலகம் அமைக்கவும், ஈ.கே.குரு சாலையில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

எழும்பூர் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கவும், வேலாயுதம் தெருவில் ஐந்து எல்.இ.டி.யுடன் கூடிய விளக்குகள் அமைக்கவும், வெங்கு பிள்ளை தெருவில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு புதிய உபகரணங்கள் வழங்கவும், சாமி தெருவில் புதிதாக உடற்பயிற்சி கட்டவும், 58, 61வது வார்டுகளில் உள்ள பொது கழிப்பிடங்களை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

மேலும் 58, 61வது ஆகிய வார்டுகளில் மிகவும் மோசமான நிலையிலுள்ள காளத்தியப்பா தெரு, ஆரணி முத்து தெரு, தாக்கர் தெரு, பெரியாள்ளை தெரு, கற்பூர தெரு, கந்தப்ப தெரு, கோவளம் முத்து தெரு, லாலகுட்டி தெரு, ரொட்டி கிடங்கு திருவேங்கடம் தெரு, டாக்டர் அழகப்பா தெரு, தொப்பை தெரு, பிரதப் பெட் தெரு, டாக்டர் பி.வே.செரியன் கிரசண்ட் தெரு, சேட் காலனி 1 மற்றும் 2 தெரு, டிரைவர் தெரு, ஆராவமுதன் கார்டன் மற்றும் மாண்டியத்து தெரு ஆகிய தெருக்களில் புதிதாக தார் சாலைகளை அமைத்திட வேண்டும் என்று அதிகாரிகளிடம் கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், வட்டச் செயலாளர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, வெ.மருதன், டால்பின் அரிகிருஷ்ணன், அவைத் தலைவர் களரிமுத்து, 61வது வட்ட துணைச் செயலாளர் ரவிவர்மன், ரசூல் மாவட்ட பிரதிநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a comment