
ரூ.42 லட்சத்தில் கால்பந்து மைதானம் சீரமைப்பு பணி மாவட்டச் செயலாளர்
பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்
சென்னை, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 107வது வார்டில் சேத்துப்பட்டு சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானத்தை சீரமைத்துத் தரும்படி வைத்த கோரிக்கையை ஏற்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி கால்பந்து விளையாட்டு மைதானத்தில் செயற்கை புல்தரை, உடற்பயிற்சி கூடம், பார்வையாளர்கள் மாடம், தண்ணீர் இறைக்கும் மின் மோட்டார் இயந்திர அறை, சுற்றுச் சுவர் இரும்பு வேலி ஆகிய அமைத்திடும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ. பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பகுதிச் செயலாளர் ஜெ.விஜயகுமார், வட்டச் செயலாளர் எல்.சுந்தராஜன், எம்.ரமேஷ், பாண்டியன், குறளரசன், சி.டி.சுரேஷ், பிரகாஷ், ஆன்ரூஸ், பாலமுருகன், நிர்மலா தேவி, தேவகிருபை, அமுல்பாண்டியன், சரஸ்வதி, எம்.எம்.மாறன், தமிழா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், சதிஷ், சாதிக், நாகேந்திரன், இளங்கோவன், எழில், ஜெயமூர்த்தி, ரமேஷ், அம்பேத்கர், வசந்த், அருண், புஷ்பநீலா, சரஸ், சத்தியா, எழில்அரசி, கண்ணகி, குப்பம்மாள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.