எழும்பூர் சாஸ்திரி நகரில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

எழும்பூர் சாஸ்திரி நகரில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

சட்டமன்றத்தில் கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சட்டமன்றத்தில், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி ஒன்றை எழுப்பி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது: எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 58வது வார்டிலுள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏறக்குறைய 1,800 வீடுகள் இருக்கிறது.

இந்த சாலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை போட்டப்பட்டது. அந்த பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. தற்போது, அந்த சாலையில் 1,500 வீடுகள் 3 அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஈ.வி.கே.சம்பத் சாலையில் பெரியார் திடல், மற்றும் ஆணையர் அலுவலகமும் இருக்கிறது.

இந்நிலையில், சிறிய அளவில் மழை பெய்தாலும் கூட கழிவுநீர் கால்வாய்களும், மழைநீர் வடிகால்வாய்களும் நிரம்பி அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அளவிற்கு நிலை உள்ளது. அதே போல, ரிதர்டன் சாலையில் உள்ள மழைநீர் கால்வாய்களையும், கழிவுநீர் கால்வாய்களையும் புதுப்பித்து தர அரசு ஆவண செய்யுமா? இதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பதில் அளித்து கூறியதாவது: உறுப்பினர் கூறிய இடங்களில் எல்லாம் கண்டிப்பாக துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment