60 ஆண்டுகால கோரிக்கையான குடிநீர் இணைப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தி.மு.க. MLA கே.எஸ். இரவிச்சந்திரன்

60 ஆண்டுகால கோரிக்கையான குடிநீர் இணைப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தி.மு.க. MLA கே.எஸ். இரவிச்சந்திரன்

60 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு கண்ட எழும்பூர் எம்.எல்.ஏ. K.S. இரவிச்சந்திரன்

கார்ப்ரேஷன் லைன் போகிப்பாளையம் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர்இணைப்பு வசதி.

போகிப்பாளையம் குடியிருப்பு மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான குடிநீர் இணைப்பு வசதியை ஏற்படுத்தி தர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது, எழும்பூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். இரவிச்சந்திரன் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக கிடைத்த வெற்றி என்று அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். .

சென்னை, எழும்பூரிலுள்ள போகிப்பாளையம் குடியிருப்பு பகுதியில் கிட்டதட்ட 338 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது.

இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் இணைப்பு வசதி எதுவும் இல்லாமலேயே வசித்து வருகிறார்கள்.

இதை அறிந்த எழும்பூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். இரவிச்சந்திரன், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும், சம்மந்தப்பட்டத் துறை அதிகாரிகளுக்கும் கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் சந்தித்து, போகிப்பாளையம் குடியிருப்பு மக்கள் குடிநீர் இணைப்பு வசதியில்லாமலும், அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளாலும் அவதிப்பட்டு வருவதை தெரிவித்து, உடனடியாக குடிநீர் இணைப்பு வசதியை ஏற்படுத்தி தரும்படி வலியுறுத்தி வந்தார்.

அதுமட்டுமல்லாது, அந்த குடியிருப்பு பகுதியிலுள்ளவர்களுக்கு சொத்துவரி மதிப்பீடு செய்து அதற்கான வரியை வசூலித்து ரசீது வழங்கி அல்லது தடையில்லா சான்று வழங்கி சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மூலம் குடிநீர் இணைப்பு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுடம் நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்த தொடர் முயற்சிகளுக்கு இடையே, தமிழக சட்டசபை கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம், இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. போகிப்பாளையம் குடியிருப்பிலுள்ள மக்கள் குடிநீர் இணைப்பு வசதி ஏதுமில்லாமல் அனுபவித்து வரும் துன்பங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இப்படி தொடர்ந்து ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, போகிப்பாளையம் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிட நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனருக்கு மீண்டும் கடந்த 22.12.2020 அன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் போகிப்பாளையம் குடியிருப்புகளுக்கான சொத்துவரி மதிப்பீடு செய்யும் பணியும் முடிக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். இரவிச்சந்திரன் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக போகிப்பாளையம் குடியிருப்பு மக்களின் சுமார் 60 ஆண்டுகாலமான கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் இணைப்புக்கு தீர்வு கண்ட திமுக எம்.எல்.ஏ. இரவிச்சந்திரனுக்கு போகிப்பாளையம் குடியிருப்பு மக்கள் மட்டுமல்லாது எழும்பூர் தொகுதி மக்களும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment