அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா… தொடங்கி வைத்த கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ

அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழா… தொடங்கி வைத்த கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்துள்ளார்.

எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 77வட்டம் P.K.காலனியில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழாவை தொடங்கி வைக்க வேண்டும் என்று அத்தொகுதி மக்கள், சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அம்மக்களின் கோரிக்கையை ஏற்று, அன்னை வேளாங்கண்ணி மாதா தேர் திருவிழாவை, கே.எஸ்.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். முன்னதாக, தேர் திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக வந்த கே.எஸ்.இரவிச்சந்திரனுக்கு, அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.