எழும்பூர் சட்டமன்ற தொகுதியில்  “புதிய பல்நோக்கு மையம்”  கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் “புதிய பல்நோக்கு மையம்” கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

புதிய பல்நோக்கு மையம்:அடிக்கல் நாட்டிய கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ

எழும்பூர் தொகுதியின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பல்நோக்கு மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.

எழும்பூர் தொகுதி மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 77-வது வட்டம் போகிப்பாளையம், கார்பொரேஷன் லேனிலுள்ள, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், புதிய பல்நோக்கு மையம் அமைப்பதற்கான நடவடிக்கையை, சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.

தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பல்நோக்கு மையம் அமைக்க திட்டமிட்ட கே.எஸ்.இரவிச்சந்திரன், அதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை நடத்தினார். இந்நிகழ்ச்சியில், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு, அடிக்கல்லை நாட்டினார்.

இதில், மாவட்ட பிரதிநிதி மா.காந்தி, பகுதி பிரதிநிதி தஸ்தகீர் மற்றும் இஸ்லாமிய சமூக பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.