எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 3 நியாய விலைக் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 3 நியாய விலைக் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

பொதுமக்கள் கோரிக்கை:நியாய விலைக் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ

எழும்பூர் தொகுதிக்குட்டப்பட்ட 58-வது வட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 3 நியாய விலைக் கடைகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எழும்பூர் தொகுதிக்குட்டப்பட்ட 58-வது வட்டத்தில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களது பகுதிகளில் நியாய விலைக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.இரவிச்சந்திரனுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றும், கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்கியும், எழும்பூர் தொகுதி 58-வது வட்டத்திலுள்ள நேவல் மருத்துவமனை சாலையில், 3 நியாய விலைக் கடைக்களை அமைக்க கே.எஸ்.இரவிச்சந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன், புதிய கட்டிடங்கள்’’ கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், வட்டச் செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி நித்யராஜ், தகவல் தொழில்நுட்ப பகுதி ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேலன், வட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.