எழும்பூர், சென்ட்ரல், சேத்துப்பட்டு ரயில் நிலையங்களை சீரமைக்க வேண்டும்  சட்டசபையில் ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

எழும்பூர், சென்ட்ரல், சேத்துப்பட்டு ரயில் நிலையங்களை சீரமைக்க வேண்டும் சட்டசபையில் ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

கடந்த 2-8-2016-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் நடந்த மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சரந்திரன் பங்கேற்று பேசியதாவது:-

எழும்பூர் தொகுதியில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைக்களிலும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் உரிய பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எழும்பூர் மகளிர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் தாய்மார்களின் நீண்ட நாள் கோரிக்கையான சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஆகிய கருவிகளை வழங்கி பயன்பெற வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கோள்கிறேன். எழும்பூர் கண் மருத்துவமனையை பழைய கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்திற்கு மாற்ற சாய்தளத்துடன் கூடிய மேம்பாலம் கட்டித்தர வேண்டும்.

எழும்பூர் புதிய கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நோயாளிகள் நெடுஞ்சாலையைக் கடப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவதால் , உடனடியாக சாய்தளத்துடன் கூடிய நடைமேம்பாலத்தை புதிய கண் மருத்துவமனையில் இருந்து பழைய கண் மருத்துவமனைக்கு அமைத்து தர வேண்டும். அதேபோல பழைய கண் மருத்துவமனையில் நோயாளிகள் தங்குமிடத்திற்கு, சாப்பாட்டை ஏற்றிக்கொண்டு செல்லும் டிராலிகள் செல்வதற்கு அங்குள்ள சாலைகள் குண்டும், குழியாகவும் இருக்கின்றன. டிராலிகள் நல்லமுறையில் செல்ல முடியவில்லை. ஆகையால் அந்த கண் மருத்துமனையில் உள்ள சாலைகளையும் செப்பனிட்டு தர வேண்டும் என்று கோட்டுக்கொள்கிறேன்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் , சேத்துப்பட்டு ரயில் நிலையங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் , போதுமான கழிவறை வசதி, சி,சி.டி.வி கேமரா ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரவேண்டும். ஏனென்றால் சென்ற முறை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்த நிகழ்ச்சயில் மத்திய அமைச்சர், தமிழக அரசு கேட்டுக்கொண்டால் ரயில்வே திட்டங்களை திறம்பட மேம்படுத்தி தர தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தார். இதை பயன்படுத்திக்கொண்டு தமிழக அரசானது உடனடியாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து எழும்பூர், சென்ட்ரல், சேத்துப்பட்டு ரயில் நிலையங்களை சீரமைத்துத் தர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ரவிச்சந்திரன் பேசினார்.