கல்வி ஊக்கத்தொகை வழங்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன்

கல்வி ஊக்கத்தொகை வழங்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதியும், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கருதியும், அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.

இதனை உணர்ந்த எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5000 ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார்.

மேலும், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகம், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை கே.எஸ்.இரவிச்சந்திரன் தனது சொந்த நிதியில் வழங்கினார்.

கல்வி ஊக்கத்தொகையை வாங்கிய மாணவ – மாணவியர்களும், பெற்றோர்களும் கண்ணீர் மல்க, சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே‌. சேகர்பாபு MLA அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் நோட்டு, புத்தகம், குடிநீர்பாட்டில், ஜாமன்ரி பாக்ஸ் ஆகியவற்றை வழங்கினார்.