மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன்

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய கே.எஸ்.இரவிச்சந்திரன்

எழும்பூர் தொகுதி மாணவர்கள், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் வழங்கினார்.

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 77 வட்டம் புளியந்தோப்பில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தோடு, மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமைகளை, அத்தொகுதி மக்கள் எடுத்துரைத்தனர்.

பின்னர், தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரனிடம், மாணவர்களும், இளைஞர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, எழும்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு, மாணவர்களையும், இளைஞர்களையும் வரவழைத்த கே.எஸ்.இரவிச்சந்திரன், அவர்களுக்கு கால்பந்து, ஷூ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.