எழும்பூர் சட்டமன்ற தொகுதியில்  “புதிய பொது கழிப்பிட கட்டிடம்”  கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி.

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் “புதிய பொது கழிப்பிட கட்டிடம்” கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி.

சென்னை மாநாகராட்சி நிர்வாகம் அலட்சியம்:நடவடிக்கை எடுத்த கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 61வது வட்டத்திலுள்ள எல்.ஜி.சாலையில், மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. சென்னை மாநாகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை, மாநாகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வந்தது

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அந்த பொதுக்கழிப்பிடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் ஒன்றை கட்டித்தரக் கோரி, எழும்பூர் தொகுதி 61வது வட்டத்திலுள்ள பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரனுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, பழுதடைந்து மோசமான நிலையிலுள்ள பொதுக்கழிப்பிடம் அகற்றப்பட்டது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, புதிய கட்டிம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, புதிய பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெறும் என்றும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ பங்கேற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமுடி, வட்டச்செயலாளர் மொய்தீன், மாவட்ட பிரதிநிதி ரசூல், அன்புமணி, புஷ்பராஜ், முன்னாள் வட்டச்செயலாளர் செல்வராஜ், மலர்கொடி, சுகந்தி, சர்மிளா, எஸ்.ஆர்.பாலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அத்தொகுதி மக்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.