எழும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து SMART CLASS திறப்பு விழா

எழும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து SMART CLASS திறப்பு விழா

மாணவர்களின் நலன் கருதி எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 5 திறனறி ( SMART CLASS) வகுப்புகளை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு M.L.A திறத்து வைத்துள்ளார்.

மாண்புமிகு கழகத் தலைவர், கழக இளைஞரணி செயலாளர் ஆகியோரின் நல்வாழ்த்துகளோடு, இன்று காலை (19.02.2021) 10.30 மணியளவில், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 107வது வட்டம், சுப்புராயன் தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 5 திறனறி வகுப்பறைகளை ( SMART CLASS – 5 ROOMS), சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு M.L.A திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி வான்மதி கதிரவன், அவைத்தலைவர் எஸ்.சண்முகம், பகுதி பிரதிநிதி கருணாகரன், வட்ட துணை செயலாளர் G.வெங்கடேசன், இளைஞர் அணி அமைப்பாளர் ப.சங்கர், K.V.சிவக்குமார், வட்ட பிரதிநிதிகள் ந.சசிகுமார், ஆனந்த், சந்தியா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று, இன்று காலை (19.02.2021) 11 மணியளவில், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் அவர்கள், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 58வது வட்டம், ராட்லர் தெருவில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 திறனறி வகுப்பறைகள் (SMART CLASS – 6 ROOMS) மற்றும் ஆசிரியர்கள் ஓய்வறை, நூலகம், கணிணி ஆய்வகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் மருதன், இலக்கிய அணி துணை செயலாளர் நாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜதுரை, குபேரன், வட்ட கழக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, கருஞ்சட்டை முரளி, E.ரவிச்சந்திரன், N. விஜயகுமார், S.சுகாதகர், சூளை குமார், R.மனோகரன், சின்னபொண்ணு, இளவரசி, மணிமேகலை, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment